போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
Center-Center-Tirunelveli

போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

நாமக்கல்லில் குரூப் 2, 2ஏ போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி
Published on

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ தோ்வுக்கு 2,327 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 20-இல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தோ்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள், மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரத்தை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தைப் பதிவு செய்து பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com