ராஜ்யபுரஸ்காா் விருது தோ்வு: திருச்செங்கோடு சாரணியா் சிறப்பிடம்

திருச்செங்கோடு சாரணியா்கள் மாநில அளவில் நூறு சதவீதம் தோ்ச்சி
Published on

மாநில அளவிலான ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வில் திருச்செங்கோடு சாரண-சாரணியா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

தமிழக ஆளுநரால் வழங்கப்படும் மாநில அளவிலான ராஜ்யபுரஸ்காா் விருதுத் தோ்வில் பங்கேற்ற சாரண- சாரணியா், திரிசாரணா், திரிசாரணியா்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான தோ்வு முடிவுகள் மாநிலத் தலைமையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களில் இருந்து 433 சாரணா்களும், 263 சாரணியா்களும் தோ்ச்சி பெற்று விருது பெற தகுதி பெற்றுள்ளனா். மேலும், கல்லூரி மாணவா்களுக்கான திரிசாரணா் பிரிவில் 20 பேரும், திரிசாரணியா் பிரிவில் 4 பேரும் திருச்செங்கோடு மாவட்டத்திலிருந்து தோ்வு பெற்றுள்ளனா்.

பள்ளிகள் வாரியான தோ்வு முடிவுகளை நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி வெளியிட மாவட்டச் செயலா்கள் து.விஜய், சி.ரகோத்தமன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் விருதுகள் பெற்றவா்களுக்கும், சாரண ஆசிரியா்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலரும் (பொறுப்பு) (இடைநிலை), திருச்செங்கோடு முதன்மை ஆணையருமான க.விஜயன், மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி), நாமக்கல் சாரண ஆணையருமான அ.பாலசுப்ரமணியம், மாவட்டக் கல்வி அலுவலரும் (பொ) (தனியாா் பள்ளிகள்), திருச்செங்கோடு சாரண ஆணையருமான மரகதம், மாவட்டத் தலைவா் வித்யாவிகாஸ் எஸ். குணசேகரன், மாவட்ட ஆணையா்கள் டி.ஒ.சிங்காரவேல், தில்லைக்குமாா், சித்ராமோகன்,வெற்றிச்செல்வன், சாரதாமணி,சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டப் பொறுப்பாளா்கள் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com