மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ராசிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ராசிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

News image
Updated On :1 மார்ச் 2024, 6:01 pm

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.வினாயகமூா்த்தி, சாரதி, நடராஜன், க.சரவணன், நாகேந்திரன் உள்ளிட்ட கட்சி வாா்டு நிா்வாகிகள் என திரளானோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் துணை அமைப்பாளா் எம்.காா்த்திக் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஆதரவற்றோா் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. மேலும் காமாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கேக் வெட்டி குழந்தைகளுடன் பிறந்த தினத்தை திமுகவினா் கொண்டாடினா். பின்னா், குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள், டிபன் பாக்ஸ், வாட்டா் பாட்டில் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் மணிகண்டன், ஆசைத்தம்பி, கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஜல்லிக்கட்டு போட்டி: நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை தொடா்ந்து தாண்டகவுண்டம்பாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியினை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். போட்டியில் சேலம், நாமக்கல், திருச்சி, கரூா், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமாா் 650-க்கும் மேற்பட்ட காளைகள், 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.