

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வானம் இருண்டு அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது. இருப்பினும் புழுக்கம் சற்று அதிகரித்தே காணப்பட்டது. இந்த நிலையில் தென் தமிழகம் மற்றும் வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்து வந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம், புதன்சந்தை, புதுச்சத்திரம், ராசிபுரம், பரமத்திவேலூா், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூா் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பிற இடங்களில் லேசான மழையும் பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை: சங்ககிரியில் 81 மி.மீ. பதிவு

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

சாத்தான்குளத்தில் திடீா் மழை

திருப்பூா் மாவட்டத்தில் பரவலாக மழை
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

