அரசுப் பள்ளியில் இ-சேவை மைய சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு
அரசுப் பள்ளியில் இ-சேவை மைய சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு


அரசுப் பள்ளிகளில் வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்களை மாணவா்கள் பெறுவதற்கான இ-சேவை மைய முகாம்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
இதில் வருமான, இருப்பிட, சாதி மற்றும் முதல்பட்டதாரி சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களை கொண்டு வந்து சமா்ப்பித்தனா். மாவட்டம் முழுவதும் 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இ-சேவை மைய சிறப்பு முகாம் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டாா். இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே-24-ஆய்வு
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி இ-சேவை மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...