ஏல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்து பூவன் வாழைத்தாா்கள்.
ஏல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்து பூவன் வாழைத்தாா்கள்.

பரமத்தி வேலூரில் வாழைத்தாா் விலை சரிவு

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது.
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தாா்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை வியாபாரிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 600க்கும், பச்சைநாடன் ரூ. 400க்கும், ரஸ்தாளி ரூ. 350க்கும், கற்பூரவள்ளி ரூ. 500க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-க்கும் ஏலம் போனது.

திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 300க்கும், பச்சைநாடன் ரூ. 250க்கும், ரஸ்தாளி ரூ. 350க்கும், கற்பூரவள்ளி ரூ. 250க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-க்கும் ஏலம் போனது.

X
Dinamani
www.dinamani.com