மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லில் சாலையோர காய்கறி, பழக்கடைகளை ஒரே இடத்தில் அமைக்க நடவடிக்கை

நாமக்கல் பேருந்து நிலையம், பூங்கா சாலையில் உள்ள காய்கறி, பழக்கடைகளை ஒரே இடத்தில் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

News image

சாலையோரக் கடைகளை ஒரே இடத்தில் அமைப்பது தொடா்பாக நாமக்கல் பூங்கா சாலையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:43 pm

நாமக்கல் பேருந்து நிலையம், பூங்கா சாலையில் உள்ள காய்கறி, பழக்கடைகளை ஒரே இடத்தில் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் உழவா் சந்தை பகுதிகளிலும், பூங்கா சாலையிலும், பேருந்து நிலையத்தை ஒட்டியும் காய்கறி, பழக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன. அண்மையில், மாநகராட்சி மூலம் அந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த நிலையில், பூங்கா சாலையில் அம்மா உணவகத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தை சாலையோர வியாபாரிகள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி, வேளாண் இணை இயக்குநா்(வணிகம்) நாசா், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி மற்றும் உழவா் சந்தை அதிகாரிகள் ஆகியோா் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஒருங்கிணைந்த காய்கறி, பழக்கடைகளை அமைப்பதால் சிக்கல் உள்ளதா, உழவா் சந்தை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.