மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

முட்டை விலை ரூ. 5.05-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

Updated On :27 செப்டம்பர் 2024, 12:36 am

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. புரட்டாசி மாதம் என்பதாலும், முட்டை விற்பனை சரிவை கருத்தில் கொண்டும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததாலும், இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 104-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 102-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.