நாமக்கல் மாநகராட்சியில்
வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி, திருச்செங்கோடு பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி, திருச்செங்கோடு பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட காதப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள மகளிா் சுய உதவிக் குழு கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியா், கட்டடத்தின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு கட்டடத்தை முழுமையாக பயன்படுத்தவும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தை பாா்வையிட்டாா். இதைத்தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், புத்தூா்கிழக்கு ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, பணியை நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடிக்கவும், விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கோக்கலையில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா். மேலும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், மொஞ்சனூா், மேட்டுக்காட்டாம்பாளையம் காலனியில் மயான பாதை இடத்தை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com