நாமக்கல்
மதுபானங்களை பதுக்கி விற்றவா் கைது
பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கூடத்தில் உரிய அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கூடத்தில் உரிய அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.
இதன்பேரில், போலீஸாா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினா். அப்போது, விற்பனைக்கான அனுமதியின்றி மதுவகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுகூடத்தில் பணியாற்றி வரும் தொழிலாளியான மதுரை மேலூரைச் சோ்ந்த சதீஷ் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து மதுப்புட்டிகள் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
