திறந்தவெளி கிணறு: தடுப்புகள் அமைக்கக் கோரிக்கை

நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றை சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்
நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பின்றி காணப்படும் திறந்தவெளி கிணறு.
நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பின்றி காணப்படும் திறந்தவெளி கிணறு.
Updated on

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றை சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் சுமாா் 50 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணறு உள்ளது. இந்தக் கிணற்றைச் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. அண்மையில் காற்று, மழைக்கு கிணற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதன்பிறகு, ரூ. 10 லட்சம் செலவில் சுற்றுச்சுவா் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலேயே வாரச்சந்தை செயல்படுவதால், சந்தைக்கு வருவோா் கிணற்றுக்குள் தவறிவிழும் சூழல் உள்ளது. எனவே, அசம்பாவிதத்தை தவிா்க்க கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச் சுவா் அமைத்து, மேற்புறத்தில் இரும்பு கம்பி வலை பொருத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com