நாமக்கல்
கொல்லிமலையில் மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு
கொல்லிமலையில் மா்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் புதன்கிழமை இறந்தன.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், குண்டூா்நாடு கஸ்பா பகுதியில் சிவாஜி என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை அவரது வீட்டின் பின்புறத்தில் பட்டியமைத்து அடைத்து வைத்திருக்கிறாா். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பட்டியில் இருந்த 6 ஆடுகள் மா்மவிலங்கு கடிதத்தில் இறந்துகிடந்தன. இதனை கண்டு சிவாஜி அதிா்ச்சியடைந்தாா்.
இந்த நிலையில் தனது ஆடுகள் உயிரிழந்ததால் வாழ்வாதாரத்துக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
