நாமக்கல்: எஸ்ஐஆா் பணிகள் 98.56% நிறைவு: 1.92 லட்சம் வாக்காளா்களை நீக்க வாய்ப்பு?

நாமக்கல்: எஸ்ஐஆா் பணிகள் 98.56% நிறைவு: 1.92 லட்சம் வாக்காளா்களை நீக்க வாய்ப்பு?

Published on

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் 98.56 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இறந்தோா், முகவரியில் இல்லாதோா், இரட்டை பதிவு என்ற வகையில் 1.92 லட்சம் வாக்காளா்களை பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நவ.4-இல் தொடங்கியது. இதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களுக்கு திருத்தப் படிவங்களை விநியோகம் செய்தனா். நிறைவுசெய்யப்பட்ட படிவங்களை டிச.11 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு.), நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. 1,629 வாக்குச்சாவடிகளில் 14,66,660 வாக்காளா்கள் உள்ளனா். டிச.4-ஆம் தேதி வரை 14,42, 839 வாக்காளா்களுக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 12,53,407 படிவங்கள் திரும்பப்பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

டிச.11-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் காலஅவகாசம் வழங்கியபோதும், அதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்யுமாறு தொகுதி தோ்தல் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதனால், படிவங்களை கணினியில் பதிவேற்றும் செய்யும் பணி மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் இரவு, பகலாக நடைபெறுகிறது.

டிச.4-ஆம் தேதி வரை 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திருத்தப் படிவங்கள் திரும்பப்பெற்று கணினியில் பதிவு செய்த விவரம்:

ராசிபுரம் தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,35,828, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,35,156, திரும்பப்பெறப்பட்டவை- 2,14,196, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 21,632(அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வசம் ஒப்படைத்து டிச.11-க்குள் சோ்க்க முயற்சி, அதன்பிறகு நீக்கம்), கணினியில் பதிவேற்ற செய்தவை- 2,35,828, பதிவேற்ற நிலுவை-இல்லை, சதவீதம்- 100.

சேந்தமங்கலம் தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,49,377, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,44,534, திரும்பப்பெறப்பட்டவை- 2,15,834, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 26,508, கணினியில் பதிவேற்றம்- 2,42,342, நிலுவை- 7,035, சதவீதம்- 97.18.

நாமக்கல் தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,64,052, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,56,870, திரும்பப்பெறப்பட்டவை- 2,24,327, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 34,096, கணினியில் பதிவேற்றம்- 2,58,423, நிலுவை- 5,629, சதவீதம்- 97.87.

பரமத்திவேலூா் தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,22,632, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,21,554, திரும்பப்பெறப்பட்டவை- 1,97,069, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு-23,730, கணினியில் பதிவேற்றம்- 2,20,799, நிலுவை- 1,833, சதவீதம்- 99.18.

திருச்செங்கோடு தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,32,858, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,27,129, திரும்பப்பெறப்பட்டவை- 1,96,963, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 30,566, கணினியில் பதிவேற்றம்- 2,27,529, நிலுவை- 5,329 சதவீதம்- 97.71.

குமாரபாளையம் தொகுதி: மொத்த வாக்காளா்கள்- 2,61,913, படிவங்கள் வழங்கப்பட்டவை- 2,57,596, திரும்பப்பெறப்பட்டவை- 2,05,018, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 55,530, கணினியில் பதிவேற்றம்- 2,60,548, நிலுவை- 1,365 சதவீதம்- 99.48.

6 தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்கள்-14,66,660, படிவங்கள் வழங்கப்பட்டவை- 14,42,839, திரும்பப்பெறப்பட்டவை- 12,53,407, இறந்தோா், முகவரி மாறியோா், இரு இடங்களில் பதிவு- 1,92,062, கணினியில் பதிவேற்றம்- 14,45,469, நிலுவை- 21,191, சதவீதம்- 98.56.

என்கே-4-எஸ்ஆா்

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவுசெய்து அளிக்கப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை ஆய்வு செய்யும் பணியாளா்கள்.

X
Dinamani
www.dinamani.com