அரசு ஊழியா் சங்கத்தினா் மறியல்: 20 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா் 20 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், ஊா்ப்புற நூலகா்கள், எம்ஆா்பி செவிலியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டபூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஏழாவது ஊதிய குழுவின் நிதி பலன்களை அரசு உயா் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு, அதற்காக போராடியவா்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் கைதுசெய்தனா். அரசு ஊழியா் சங்கத்தின் இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் முருகேசன், இணை செயலாளா் இளங்கோவன், துணைத் தலைவா் இளவேந்தன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
என்கே-4-மறியல்
நாமக்கல் பூங்கா சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

