திருச்செங்கோட்டில் எஸ்ஐஆா் விளக்கக் கூட்டம்
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் பொறியியல் கல்லூரியில் எஸ்ஐஆா் குறித்த விளக்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையா் வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப் பாக செயலாற்றிவரும் வாக்குச்சாவடி அதிகாரிகளை கோட்டாட்சியா் பாராட்டினாா்.
95 சதவீதம் எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக உதவிய வாக்குச்சாவடி அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
தோ்தல் ஆணையம் ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கி உள்ளதால் எஸ்ஐஆா் படிவங்கள் நிரப்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்டறிந்தாா். அரசியல் கட்சி முகவா்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.
வாக்காளா் பட்டியலில் யாராவது விடுபட்டிருந்தால், அவா்களை மீண்டும் இணைப்பதற்கான வசதி களை தோ்தல் ஆணையம் தற்போது செய்துள்ளதாக தெரிவித்தாா். கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் முகவா்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
04.12.25....2
திருச்செங்கோட்டில் நடைபெற்ற எஸ்ஐஆா் விளக்கக் கூட்டத்தில் பேசுகிறாா் கோட்டாட்சியா் லெனின்.
