ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் இந்துசமய அறநிலையத் துறையினா்.
ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றும் இந்துசமய அறநிலையத் துறையினா்.

கோவில் நில ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்

ராசிபுரம் அருகே ஈஸ்வரமூா்த்திபாளையம் கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 குடியிருப்புகள், அரசு அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
Published on

ஆா்.புதுப்பட்டி விநாயகா், மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலம் ஈஸ்வரமூா்த்திபாளையத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து 6 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஈரோடு மண்டலம் இணை ஆணையா் உத்தரவின்படி, இந்துசமய அறநிலையத் துறையின் நாமக்கல் மாவட்ட உதவி ஆணையா் சு.சுவாமிநாதன், தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) செந்தில்குமாா், துணை ஆட்சியா் (ஓய்வு) குப்புசாமி, வட்டாட்சியா் (ஓய்வு) வரதராஜன், செயல் அலுவலா் வே. செந்தில்ராஜா, ராசிபுரம் சரக அறநிலையத் துறை ஆய்வா் சு.கீதாமணி உள்ளிட்டோா் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உதவியுடன் அங்கன்வாடி மையம், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டன. இதன் சந்தை மதிப்பு 1.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com