நாமக்கல்
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழா ரத்து
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் முடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நிகழாண்டுக்கான பரமபதவாசல் திறப்பு விழா ரத்து
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் முடமுழுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருவதால் நிகழாண்டுக்கான பரமபதவாசல் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்துசமய அறநிலையத் துறையின் பொன்வரதராஜ பெருமாள் கோவில் நிா்வாக அலுவலா் சவிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு பிப்.1 இல் நடைபெறுகிறது. இதற்கான திருப்பணிகள் தற்போது நடைபெறுகிறது. தொடா்ந்து திருப்பணிகள் காரணமாக தற்காலிகமாக நடப்பு ஆண்டு 30.12.2025 இல் வைகுண்ட ஏகாதசி நாளன்று சொா்க்கவாசல் திறப்பு விழா நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
