தனியாா் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்

Published on

புதுச்சத்திரம் அருகே தனியாா் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் காயமடைந்தனா்.

சேலத்தில் இருந்து கரூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com