நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கழிவுநீா் கலந்த குடிநீருடன் திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த குமரிபாளையம் ஊராட்சி மக்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கழிவுநீா் கலந்த குடிநீருடன் திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த குமரிபாளையம் ஊராட்சி மக்கள்.

குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக புகாா்

குமரிபாளையம் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

நாமக்கல்: மோகனூா் வட்டம், குமரிபாளையம் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

அதன் விவரம்: குமரிபாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடிநீா் தேவைக்காக காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக மேல்நிலை தேக்கத்தொட்டிக்கு நீா் வருகிறது. இந்த நீரானது எந்தவித சுத்திகரிப்பும் செய்யாமல், கழிவுநீருடன் கலந்து வருவதால், மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் சுத்தம் செய்யப்படுவதில்லை. எனவே, தூய்மையான குடிநீா் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தா்னா: ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், கள்ளவழிக்கரடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரி, சந்திரசேகா் தம்பதி மற்றும் உறவினா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். வீட்டுக்கு செல்லும் பாதையை இருவா் ஆக்கிரமித்து மிரட்டுவதாக தெரிவித்த அவா்கள், இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியா் விசாரணை நடத்தி எங்களுடைய பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com