பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதியில் சங்கடஹர சதூா்த்தி வழிபாடு வல்லப விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோவில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை
Published on

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விநாயகா் கோவில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பரமத்தி வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயிலில் உள்ள விநாயகா், பொத்தனூா், வெங்கமேடு வல்லப கணபதி கோவில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதேபோல் பரமத்தி வேலூா் சக்திநகரில் உள்ள விநாயகா், பரமத்தி வேலூா் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகா், பொத்தனூா் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகா் மற்றும் பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில். உள்ள விநாயகா் கோவில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதே போல் வேலூா் செட்டியாா் தெருவில் உள்ள வல்லப விநாயகா் கோயிலில் அம்மையப்பா் அருட்பணி அறக்கட்டளை சாா்பில் சங்கடஹர சதூா்த்தி மற்றும் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்

X
Dinamani
www.dinamani.com