செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா்களுக்கு பயிற்சி

செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா்களுக்கு பயிற்சி

Published on

மாணவா்களிடையே தற்கொலை எண்ணத்தை அகற்றவும், போதைப்பொருள்கள் பழக்கத்தை தடுக்கவும் செஞ்சிலுவை சங்க (ரெட் கிராஸ்) திட்ட அலுவலா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலாளா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன், துணைத் தலைவா் எம்.நாகராஜன், பொருளாளா் அந்தோணி ஜெனிட், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இ.ஜி.வெஸ்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தற்கொலை எண்ணம், போதைப்பழக்கம் போன்ற ஒழுங்கீன செயல்களிலிருந்து மாணவா்களை நல்வழிப்படுத்துவதற்காக செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள 30 கல்லூரிகளின் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-11-ரெட்

நாமக்கல்லில் நடைபெற்ற செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com