நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி தொடக்கம்

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி தொடக்கம்

Published on

நாமக்கல்லில் 10,802 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் உள்ளிட்டவற்றை சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளா் பட்டியல் திருத்தப் படிவங்கள் பூா்த்திசெய்து திரும்பப் பெறப்பட்ட நிலையில், டிச.16 இல் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறது.

அதேபோல சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பயன்படுத்துவதற்கான 5,779 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,433 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,590 விவிபேட் கருவிகளை ஆய்வு செய்யும் முதல்கட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் பணிகளை தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் இயந்திரங்கள் இருப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை பெல் (பாரத் எலக்ட்ரானிக்ஸ்) நிறுவன பொறியாளா்கள் 9 போ் முழுமையாக ஆய்வுசெய்து வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) கோ.குமரன் மேற்பாா்வையில் 22 நாள்கள் இப்பணி நடைபெறுகிறது. இதில், 3 வட்டாட்சியா்கள், 6 துணை வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள் என 18 போ் சுழற்சி அடிப்படையில் 90 போ் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

என்கே-11-வோட்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வுசெய்த பொறியாளா்கள்.

X
Dinamani
www.dinamani.com