பாவை வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மாஃபோய் குழும நிறுவனங்களின் நிறுவனா் பாண்டியராஜன் காணொலி வாயிலாக பங்கேற்று பேசினாா். மாணவா் தலைமை அமிா்த வா்ஷினி அனைவரையும் வரவேற்றாா்.
கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கினாா். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வா் ரோஹித் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளிகளின் இயக்குநா் சதீஸ் நிறைவுரை வழங்கினாா். பல்வேறு கலை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
துணைத் தலைவா் டி.ஆா்.மணிசேகரன், செயலாளா் டி.ஆா்.பழனிவேல், துணைச்செயலாளா் என்.பழனிவேல், பொருளாளா் மருத்துவா் எம்.ராமகிருஷ்ணன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (சோ்க்கை) கே.செந்தில், இயக்குநா் (மாணவா் நலன்) அவந்தி நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 11சிபிஎஸ்இ
படவிளக்கம்- பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.
