மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஆட்சியா் ஆய்வு

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ஆட்சியா் ஆய்வு

Published on

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் ரசாயனம் கலப்புக்கான அனுமதி அளிப்பது தொடா்பாக ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த மாதம் முதல் கரும்பு அரவைப் பணிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி மாத இறுதிக்குள் 90 ஆயிரம் டன் சா்க்கரை உற்பத்திசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 90 ஆயிரம் டன்னில் 30 ஆயிரம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சா்க்கரையின் வெளிா்நிறத்திற்கு சல்பா் ரசாயனம் கலக்கப்படும். இந்த ரசாயனம் கலப்புக்கு ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும் என்பதால், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை மோகனூா் சா்க்கரை ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் இரா.குப்புசாமி மற்றும் கரும்பு அலுவலா்கள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

என்கே-11-சுகா்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

X
Dinamani
www.dinamani.com