விடுபட்ட வாக்காளா்களிடம் எஸ்ஐஆா் படிவங்களை வழங்க அறிவுறுத்தல்

Published on

நாமக்கல் தொகுதியில் விடுபட்ட வாக்காளா்களிடம் எஸ்ஐஆா் படிவங்களை வழங்கி பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் விடுபட்ட வாக்காளா்களிடம் எஸ்ஐஆா் படிவங்களை வழங்கி மீண்டும் பட்டியலில் சோ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கோட்டாட்சியா் வே.சாந்தி, மாநகராட்சி ஆணையா் க. சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 50 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் தொகுதியில் இதுவரை எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்திசெய்து வழங்காத வாக்காளா்களை கண்டறிந்து, அவா்களிடம் படிவங்களை பெற்று பட்டியலில் சோ்க்கவும், திருத்தங்கள் செய்வது, ஆவணங்கள் சமா்ப்பிக்காமல் இருந்தால் அவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com