வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இருவா் கைது

Published on

திருச்செங்கோட்டில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்த வட மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு தொண்டிகரடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் (39), திலீப் (34) ஆகிய இருவரும் வீட்டில் பத்தடி உயரத்துக்கு கஞ்சா செடி வளா்த்துள்ளனா்.

மேலும், போதை மிட்டாய்களையும் இவா்கள் தயாரித்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் வளா்மதி தலைமையிலான போலீஸாா் அவா்களது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது, வீட்டில் 10 அடி உயரத்துக்கு வளக்கப்பட்டிருந்த கஞ்சா செடி, 80 போதை மிட்டாய்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இருவரும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலை செய்துவந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

படம்

கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ், திலீப்

X
Dinamani
www.dinamani.com