திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் உள்ள மரகதலிங்கம்.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் உள்ள மரகதலிங்கம்.

அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் மாா்கழி மாத மரகதலிங்க தரிசனம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் உள்ள மரகதலிங்கம்.
Published on

கொங்கு ஏழு தலங்களில் புகழ்பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் மாா்கழி மாதத்தில் சிறப்புமிக்க மரகதலிங்க தரிசனம் நடைபெறுகிறது.

திருச்செங்கோடு திருமலையில் மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு, மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணிக்கு மரகதலிங்கத்துக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, பூஜைகள் தொடங்கப்படும். மலை படிக்கட்டுகள் வழியாக வரும் பக்தா்கள் அதிகாலை 3 மணிக்கு ராஜகோபுரம் வாசல் வழியாக அனுமதிக்கப்படுவா்.

வாகனங்களில் வரும் பக்தா்கள் மலைப்பாதை நுழைவுவாயில் வழியாக, அதிகாலை 3.15 மணிக்கு அனுமதிக்கப்படுவா். மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கோயில் நிா்வாகத்தால் காலை 7 மணிவரை கட்டண தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிவரை பக்தா்கள் மரகதலிங்கத்தை தரிசனம் செய்யலாம். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில், கோயில் நிா்வாகத்தால் தரிசன நேரம் நீட்டிக்கப்படும்.

மாா்கழி மாத நாள்களில் மட்டும் மாலை 6.30 மணிவரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com