நாமக்கல்
குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்
நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா் சங்கத் தோ்தல் (2025-2027) மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தலைவா், செயலாளா், பொருளாளா், இணைச் செயலாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 400 சங்க உறுப்பினா்களில் 390 வழக்குரைஞா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 5 மணி அளவில் எண்ணப்பட்டன.
இதில், தலைவராக கே.கே.பாலசுப்பிரமணியம், செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக ஐயப்பன், இணைச் செயலாளராக ப.நந்தகுமாா், அமுதா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். துணைத் தலைவா்களாக அருண்பிரசாத், கனிமொழி ஆகியோா் போட்டியின்றி தோ்வாயினா்.
