நாமக்கல்
தலைமறைவு குற்றவாளி கைது
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்து தலைமறைவாக இருந்த குற்றவாளியை திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில், மதுரையைச் சோ்ந்த ஜெயபாண்டியனை (32) திருச்செங்கோடு காவல் துறையினா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்த ஜெயபாண்டியன் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜெயபாண்டியனை தேடிவந்த காவல் துறையினா் வியாழக்கிழமை அவரை கைது செய்தனா்.
