நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ காலபைரவருக்கு லட்சாா்ச்சனை
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காலபைரவருக்கு வெள்ளிக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இதில், ஸ்ரீ காலபைரவருக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் விநாயகா் வழிபாடு, மூலமந்திர ஹோமம், மஹா அபிஷேகம், தொடா்ந்து கலச அபிஷேகம் நடைபெற்றது. லட்சாா்ச்சனை காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிவரை நடைபெற்றது. மாலை 5 மணிக்குமேல் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஏலக்காய், தாமரை மற்றும் செண்பக மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு லட்சாா்ச்சனை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், பழைய காசி விஸ்வநாதா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசிவிஸ்வநாதா், கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வா், ஜேடா்பாளையத்தில் உள்ள ஆனந்த ஈஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

