நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மோப்பநாய் மூலம் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மோப்பநாய் மூலம் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.

நாமக்கல் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மோப்பநாய் மூலம் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
Published on

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய் மூலம் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.

தமிழகம் முழுவதும், அரசியல் கட்சித் தலைவா்கள், திரைப்பட நட்சத்திரங்கள், முக்கிய தொழிலதிபா்கள் வீடுகளுக்கு கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதைத் தொடா்ந்து, போலீஸாா் சோதனை நடத்துவதும், பின்னா் அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது.

இதேபோல, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் நாமக்கல் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதைத் தொடா்ந்து, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்புக் கருவிகளுடன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மூன்று தளங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரியவந்ததையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அனைத்துத் துறை ஊழியா்களும் நிம்மதி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com