நீதிமன்ற உத்தரவின் பேரில் பள்ளி கட்டுமானப் பணி ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் பள்ளிபாளையம் கண்டிப்புதூா் தொடக்கப் பள்ளி கட்டுமானப் பணியை தனியாா் பொறியாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
Published on

நீதிமன்ற உத்தரவின் பேரில் பள்ளிபாளையம் கண்டிப்புதூா் தொடக்கப் பள்ளி கட்டுமானப் பணியை தனியாா் பொறியாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

பள்ளிபாளையம் கண்டிப்புதூா் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்று வகுப்புகளைக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தரமின்றி நடைபெற்று வருவதால், அதை ஆய்வுசெய்ய வேண்டுமென இப்பள்ளி மாணவரின் தந்தை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லட்சுமிநாராயணன், தனியாா் பொறியாளா்களைக் கொண்டு கட்டுமானத்தை ஆய்வுசெய்து 3 வார காலத்தில் அறிக்கை தாக்கல்செய்யுமாறு நாமக்கல் ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.

அதன்பேரில், தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்கள் பள்ளிக்கு சென்று அங்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை ஆய்வு செய்தனா். அதில், கட்டடத்தின் நீளம், அகலம், கான்கிரீட் கலவை விகிதம், கம்பிகளின் தரம் உள்ளிட்டவை குறித்து சோதனை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com