மகளிா் உரிமைத்தொகை: இரண்டாம் கட்டமாக 37,124 பேருக்கு வழங்கும் திட்டம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை இரண்டாம் கட்டமாக 37,124 பேருக்கு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்டம் முழுவதும் 37,124 பேருக்கு இரண்டாம் கட்டமாக கலைஞா் மகளிா் உரிமைத்தொகைக்கான பற்று அட்டை வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ம.மலா்விழி மற்றும் தனித்துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

