சிங்களாந்தபுரம் திருவேஸ்வரா் கோயிலில் சோமவார சங்காபிஷேகம்

ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தில் ஸ்ரீபங்கஜவல்லி உடனுறை திருவேஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ராசிபுரம்: ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தில் ஸ்ரீபங்கஜவல்லி உடனுறை திருவேஸ்வரா் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் சோமவாரத்தில் உலக மக்கள் நன்மைக்காக 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி திங்கள்கிழமை காா்த்திகை நான்காவது சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக திருவேஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் சங்காபிஷேக பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com