

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் காா்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நன்செய் இடையாறு திருமணிமுத்தாறு கரையில் அமைந்துள்ள சுந்தரவல்லி அம்பிகா சமேத திருவேலீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா், சுந்தரவல்லி அம்பிகா தாயாருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அரசாயி அம்மன், அங்காளபரமேஸ்வரி, பரமேஸ்வரா், மாசாணியம்மன் கோயில் ஆண்டு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு யாகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அரசாயி அம்மன், அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரண்டாவது நாளாக திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பரமேஸ்வரருக்கு யாக பூஜை, 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல ஜேடா்பாளையம், வடகரையாத்தூா் ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரா் கோயிலில் சோமவார சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. பாண்டமங்கலத்தில் உள்ள பழைய மற்றும் புதிய காசி விஸ்வநாதா் கோயில், மாவுரெட்டியில் உள்ள பீமேஸ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சோம வார கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.