ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
நாமக்கல்லில், ஓய்வூதியா் தினத்தை முன்னிட்டு ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,830 வழங்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அகில இந்திய அஞ்சலக மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம், மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
