பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வக் கோயில்களில் மாா்கழி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி மாத அமாவாசை மற்றும் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல வேலூா் பிரத்தியங்கிரா தேவி, வேலூா் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பகவதியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் பாண்டமங்கலம், பொத்தனூா் அனிச்சம்பாளையம், கோப்பணம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் மற்றும் குலதெய்வக் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

