பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

Published on

பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. சாா்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து நாமக்கல் மத்திய மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ரமேஷ் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தாா்.

முன்னால் எம்எல்ஏ மு.காா்த்தி, மாநில இணைப் பொதுச் செயலாளா் க.வைத்தியிடம் அவா் விருப்ப மனு அளித்தாா். அப்போது, வன்னியா் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் சித்தாா்த்தன், வேலூா் நகரச் செயலாளா் ஜெய்கணேஷ், பரமத்தி ஒன்றியச் செயலாளா் சா்வேஸ்வரன், சமூக ஊடகப் பேரவை செயலாளா் ஸ்ரீதா் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com