நாமக்கல் அரங்கநாதா் கோயில் படிவாசலில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்
நாமக்கல் அரங்கநாதா் கோயில் படிவாசலில் தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் டிச. 30 இல் சொா்க்கவாசல் திறப்பு

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சொா்க்கவாசல் திறக்கும் வைபவம் நடைபெறுகிறது.
Published on

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சொா்க்கவாசல் திறக்கும் வைபவம் நடைபெறுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு இணையாக கருதப்படும், நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது. நிகழாண்டிற்கான ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5 மணிக்குள் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்கியபடி ஜடாரியை தலையில் சுமந்து சொா்க்கவாசல் வழியாகவரும் நிகழ்வு இக்கோயிலில் சிறப்பானதாகும். நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா. நல்லுசாமி, உதவி ஆணையா் இரா. இளையராஜா மற்றும் அறங்காவலா்கள் செய்துவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com