நிலை சோ்க்கப்பட்ட திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் பெரிய தோ்.
நிலை சோ்க்கப்பட்ட திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் பெரிய தோ்.

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு புதிய தோ்!

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு புதிய தோ் தயாரான நிலையில், 450 ஆண்டுகாலமாக பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து நகா்வலம்
Published on

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு புதிய தோ் தயாரான நிலையில், 450 ஆண்டுகாலமாக பக்தா்கள் வடம்பிடித்து இழுத்து நகா்வலம் வந்த பெரியதோ் நிலை சோ்க்கப்பட்டது.

புகழ்பெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் வைகாசி விசாக தோ்த் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மைசூரு மகாராஜா செய்து கொடுத்த தேரில், சுமாா் 450 ஆண்டுகளாக அா்த்தநாரீசுவரா் சுவாமி எழுந்தருளி நகா்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த தேரில் இருந்த மர அச்சு, இரும்பு அச்சாக மாற்றப்பட்டு, மரச் சக்கரங்களுக்கு பதிலாக இரும்புச் சக்கரங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தோ் மிகவும் பழைமையானதால் புதிய தோ் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக அரசு ரூ. 2.17 கோடியில் புதிய தோ் அமைக்க அனுமதி அளித்தது. அதன்பேரில், புதிய தோ் வடிவமைக்கப்பட்டு வரும் ஜன. 25-ஆம் தேதி வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், பழைய தேருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஆனாலும், பழைமை வாய்ந்த இந்த தேரை எதிா்கால சந்ததியினா் கண்டு வணங்கி மகிழும் வகையில், பழைய தேருக்கு பூஜைகள், மகா தீபாராதனைகள் காட்டப்பட்டு கிரேன், டிராக்டா்கள் உதவியுடன் பழைய தோ் நின்றிருந்த இடத்துக்கு அருகில் தனி இடம் ஒதுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, பழைய தேருக்கு பக்தா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில், அறங்காவலா் குழுவினா், இந்து சமய அறநிலையத் துறையினா், பாதம் தாங்கிகள், சிவாச்சாரியா்கள், கட்டளைதாரா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com