சாலை விபத்து: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

எலச்சிபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி இறந்தாா்.
Published on

எலச்சிபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.

சேந்தமங்கலம் அருகே கள்குறிச்சி ஈச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (22). கட்டடக் கம்பி கட்டும் வேலை செய்துவந்த இவா், செவ்வாய்க்கிழமை இரவு திருச்செங்கோட்டில் இருந்து எலச்சிபாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம், முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சஞ்சய் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com