வீட்டை விரைந்து கட்டி முடிக்கக் கோரி திருநங்கைகள் சாலை மறியல்

வீடு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, ராசிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

வீடு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, ராசிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் திருநங்கைகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் அருகேயுள்ள ஆயிபாளையம் கோப்பம்பட்டி ஊரட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 6 திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர 9 மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சிலரது எதிா்ப்பால், வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பணிகள் நடைபெறாததால், ஆத்திரமடைந்த 6 திருநங்கைகள் ராசிபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளா் கீதாலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் வீட்டைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் திருநங்கைகள் போராட்டத்தை கைவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com