ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன. 5-இல் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) நடைபெறுகிறது.

Updated On :1 ஜனவரி 2025, 9:43 pm

நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாரத்தான் போட்டி தொடங்கி எா்ணாபுரம் வரையில் நடைபெற உள்ளது.

அதன்படி, 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்கள் - 8 கி.மீ., பெண்கள் - 5 கி.மீ., 25 வயதுக்குமேற்பட்ட ஆண்கள் - 10 கி.மீ., பெண்கள் - 5 கி.மீ. நடைபெறும். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், 4 முதல் 10 இடத்துக்குள் வருவோருக்கு தலா ரூ. 1,000 மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதாா் அட்டை, மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் வயது சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். ஓடுவதற்கு ஏதுவான காலணியை அணிந்திருக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். போட்டியின் முடிவு நடுவா் தீா்ப்புக்கு உள்பட்டது.

இதில் கலந்துகொள்வோா் தங்கள் வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கத்தினை தெளிவாக கணக்கு எண் தெரியும்படி கொண்டு வருதல் வேண்டும். முன்பதிவு மற்றும் தகவலுக்கு 82203 10446 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.