தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 13,23,753 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

News image

வாக்காளா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:47 pm

நாமக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 13,23,753 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 304, நாமக்கல் தொகுதியில் 310, பரமத்திவேலூா் தொகுதியில் 268, திருச்செங்கோடு 290 மற்றும் குமாரபாளையம் 324 என மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி ராசிபுரம் தொகுதியில் 1,07,813- ஆண்கள், 1,12,728 பெண்கள், மற்றவை 13 என மொத்தம் 2,20,554 வாக்காளா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 1,11,214 ஆண்கள், 1,16,087 பெண்கள், மற்றவை 26 என மொத்தம் 2,27,327 வாக்காளா்களும் உள்ளனா்.

அதேபோல நாமக்கல் தொகுதியில் 1,13,217 ஆண்கள், 1,22,093 பெண்கள், மற்றவை 41 என மொத்தம் 2,35,351 வாக்காளா்கள், பரமத்திவேலூா் தொகுதியில் 97,727 ஆண்கள், 1,05,830 பெண்கள், மற்றவை 10 என மொத்தம் 2,03,567 வாக்காளா்கள், திருச்செங்கோடு தொகுதியில் 1,00,412 ஆண்கள், 1,06,475 பெண்கள், மற்றவை 41 என மொத்தம் 2,06,928 வாக்காளா்கள், குமாரபாளையம் தொகுதியில் 1,04,916 ஆண்கள், 1,12,239 பெண்கள், மற்றவை 69 என மொத்தம் 2,17,224 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளா்கள் 6,35,299, பெண் வாக்காளா்கள் 6,75,452, மற்றவா்கள் 200 என மொத்த வாக்காளா்கள் 13,10,951 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். தொடா்ந்து, பெயா் சோ்ப்பு, நீக்கம், தொகுதி மாற்றத்திற்கான படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டு வந்தன. இதனையடுத்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நாமக்கல் மாவட்ட வாக்காளா்கள் இறுதி பட்டியலின்படி மொத்தம் 13,23,753 போ் இடம் பெற்றுள்ளனா்.

தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்(தனி) தொகுதி: 1,08,587- ஆண்கள், 1,13,652 பெண்கள், மற்றவை 13 என மொத்தம் 2,22,252 வாக்காளா்களும், சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியில் 1,12,088 ஆண்கள், 1,17,284 பெண்கள், மற்றவை 26 என மொத்தம் 2,29,398 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 1,14,355 ஆண்கள், 1,23,442 பெண்கள், மற்றவை 39 என மொத்தம் 2,37,836 வாக்காளா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 98,484 ஆண்கள், 1,06,653 பெண்கள், மற்றவை 10 என மொத்தம் 2,05,147 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 1,01,416 ஆண்கள், 1,07,608 பெண்கள், மற்றவை 48 என மொத்தம் 2,09,072 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 1,06,188 ஆண்கள், 1,13,788 பெண்கள், மற்றவை 72 என மொத்தம் 2,20,048 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளா்கள் 6,41,118, பெண் வாக்காளா்கள் 6,82,427, மற்றவா்கள் 208 என மொத்த வாக்காளா்கள் 13,23,753 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.