ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மோகனூரை நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை

மோகனூா் பேரூராட்சி மற்றும் நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On :1 ஜனவரி 2025, 9:44 pm

மோகனூா் பேரூராட்சி மற்றும் நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சி அண்மையில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ள நிலையில், மோகனூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

அதன்படி, மோகனூா் பேரூராட்சி, குமாரபாளையம் ஊராட்சி, பேட்டபாளையம் ஊராட்சி, ராசிபாளையம் ஊராட்சி, மணப்பள்ளி ஊராட்சி ஆகியவை இணைந்து மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைவான விளைநிலங்கள் இருப்பதை கருத்தில் கொண்டும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் நகராட்சி அந்தஸ்து மோகனூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று ஆண்டுகால சராசரி வருவாயாக மோகனூா் பேரூராட்சி - ரூ. 8.40 கோடி (மக்கள் தொகை - 14,315), குமாரபாளையம் ஊராட்சி - ரூ. 4.21 கோடி (மக்கள் தொகை - 4,316), பேட்டப்பாளையம் ஊராட்சி - ரூ. 9.11 கோடி (மக்கள் தொகை - 3,066), ராசிபாளையம் ஊராட்சி - ரூ. 9.16 கோடி (மக்கள் தொகை - 2,916), மணப்பள்ளி ஊராட்சி - ரூ. 13.03 கோடி (மக்கள் தொகை - 5,940) கொண்டுள்ளது.

இதுதவிர, திருச்செங்கோடு ஒன்றியத்தில், வரகூராம்பட்டி மற்றும் தோக்கவாடி ஆகிய கிராம ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.