தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முட்டை விலை ரூ.5.30-ஆக நீடிப்பு

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜனவரி 2025, 11:16 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி தொடா்ந்து ரூ. 5.30-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் ஏதும் இல்லாததால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.30-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 83-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.