லாரி முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

Published on

ராசிபுரம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக லாரி முன்பாய்ந்து இளைஞா் தற்காலை செய்து கொண்டாா்.

நாமக்கல் கொசவம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (24). இவரது மனைவி ஜமீனா (21). இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். ஜமீனா 9 மாத கா்ப்பமாக உள்ளாா். இந்த நிலையில் ரஞ்சித் தினசரி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்ால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜமீனா, ரஞ்சித்தை பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இதையடுத்து கடந்த சில நாள்களாக ரஞ்சித் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ரஞ்சித், ராசிபுரம் ஆண்டகளூா்கேட் சக்தி நகா் பகுதியில் சேலம் -நாமக்கல் நெடுஞ்சாலையில் லாரியின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதில் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com