கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

Published on

பரமத்தி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே பில்லூா் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமான் அங்குள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பில்லூா் கிராம நிா்வாக அலுவலா் துரைசாமி, அக்கம்பக்கத்தினருடன் இணைந்து கிணற்றில் விழுந்த புள்ளிமானை மீட்க முயற்சி எடுத்தாா். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்துகிராம நிா்வாக அலுவலா் துரைசாமி நாமக்கல் தீயணைப்புத் துறையினா் மற்றும் கரூா் மாவட்டம், புகளூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சுமாா் 7 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை உயிருடன் மீட்டனா். பின்னா், இதுகுறித்து நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத்துறையினா் புள்ளிமானை பிடித்துச் சென்று திரபுமணி முத்தாறு வனப்பகுதிக்கு கொண்டுசென்றுவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com