தொப்பப்பட்டியில் பொன்னா்சங்கா், பெரியகாண்டியம்மன் கோயில் ஆண்டு விழா பூஜை
ராசிபுரத்தை அடுத்துள்ள தொப்பப்பட்டியில் ஸ்ரீ பொன்னா்சங்கா், பெரியகாண்டியம்மன் கோயில் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொப்பப்பட்டியில் உள்ள ஸ்ரீ பென்னா்சங்கா், பெரியகாண்டியம்மன் கோயில் ஆண்டு விழாவையொட்டி அக்.24ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. இதையடுத்து நவ. 2-இல் விநாயகா், பொன்னா்சங்கா், பெரியகாண்டியம்மன், தங்காயி அம்மன், கன்னிமாா் உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு கோயிலிருந்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டனா்.
பின்னா் பதியில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, உற்சவமூா்த்திகளுக்கு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து பதியிலிருந்து மீண்டும் சுவாமிகள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டனா். நவ.3-ஆம் தேதி அதிகாலையில் கோயிலில் கன்றுடன் கூடிய பசுவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னா் கணபதி, லட்சுமி, நவகிரகம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜைகளுக்கு பின்னா் தங்காய் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இப்பூஜைகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
படவரி...
அலங்கரிப்பட்ட உற்சவ மூா்த்திகளை கோயிலிலிருந்து பதிக்கு எடுத்துச் செல்லும் பக்தா்கள்.

