ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published on

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மொத்தம் 14.77 மெட்ரிக் டன் கொண்ட 450 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,429 முதல் 7,889 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,289 முதல் 4,519 வரையிலும் என மொத்தம் ரூ. 10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

X
Dinamani
www.dinamani.com